புதுப்பொழிவுடன் மீண்டும் வருகின்றான் “எந்திரன்”!!

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய எந்திரன் இரண்டாம் பாகமும் நல்ல இடத்தை பிடித்திருந்தது.
இந்த நிலையில் ‘எந்திரன்’ திரைப்படம் மீண்டும் ஜூன் 9ம் திகதி வெளியாகவுள்ள செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k ULTRA HD தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது.
இந்த திரைப்படம் ஜூன் 9ம் திகதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதுவரை பல நடிகர்களின் படங்கள் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில், எந்திரன் திரைப்படம் முதல்முறையாக புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)