விமானத்தை கடத்த முயற்சியா? கடைசியில் நடந்தது என்ன
விமானத்தை கடத்துவது குறித்து தொலைபேசியில் பேசியதாக விமானப் பயணியான இளைஞன்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் யுகே 996 இல் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.
விமானம் புறப்படுவதற்கு முன், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன், ‘ஹைஜாக்’ என சத்தம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதுடன், விமானமும் சோதனையிடப்பட்டது. அதன் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. மாலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டது.
23 வயதான ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜுனேஜா கைது செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாராவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், 2021 முதல் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்துள்ளது.
விமான ஊழியர்களின் புகாரின் பேரில் ரித்தேஷ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.