ராஜினாமா செய்த டொமினிக்… பிரித்தானியாவின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டொவ்டன் நியமனம்
பிரித்தானியாவின் துணைப் பிரதமராக இருந்த டொமினிக் ராப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணை பிரதமரை அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
டொமினிக் ராப் , இதற்கு முன் வகித்த மூன்று பதவிகளின்போது, தனக்குக் கீழே பணியாற்றிய24 பணியாளர்களை தொந்தரவு செய்ததாக, அல்லது வம்புக்கிழுத்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.அவர்களில் 8 பேர் முறைப்படி ராப் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் ரிஷி அது குறித்து விசாரிப்பதற்காக மூத்த சட்டத்தரணியான Adam Tolley KC என்பவரை நியமித்தார்.
அதைத் தொடர்ந்து, தனது பதவிகளை ராஜினாமா செய்தார் ராப்.
பிரித்தானியாவின் துணைப் பிரதமராக இருந்த டொமினிக் ராப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணை பிரதமராக ஆலிவர் டொவ்டன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆலிவர் தற்போது பிரதமர் ரிஷியின் அமைச்சரவையில் கேபினர் அலுவலக அமைச்சராக உள்ளார்.மேலும், டொமினிக் ராப் வகித்துவந்த நீதித்துறை அமைச்சர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்ஸ் சால்க் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.