சீனாவில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

சீனாவின் சொங்சிங் மாநிலத்தில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலுவலக ஊழியரான அவர் அண்மையில் ஓயாத இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சென்றார்.
அவரின் இருமல் மிக மோசமாக இருந்ததால் இரவில் சரியான தூக்கமின்றிக் கண்கள் சிவந்துள்ளது. பரிசோதனையின்போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர் உறுதிசெய்தார்.
அதைப் பற்றி உரையாடியபோது தனக்கு காலுறைகளை நுகரும் பழக்கம் இருப்பதை மருத்துவர் அறிந்தார்.
மருத்துவர் உடனடியாக குறித்த நபரின் காலுறைகளைச் சோதித்ததில் அவற்றில் Aspergillus எனும் கிருமி இருப்பதை உறுதி செய்தார்.
அந்தக் கிருமியின் காரணமாகவே அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது எனவும் மருத்துவர் விளக்கினார்.
நாள்முழுவதும் அணியும் காலுறைகளில் வியர்வை படிவதாலும் காலணிகளில் உருவாகும் புழுக்கத்தினாலும் கிருமி உருவாகிறது என்று மருத்துவர் கூறினார்.