டித்வா(Ditwa) பேரிடர் – நன்கொடை வழங்கிய பண்டாரநாயக்க அறக்கட்டளை
நாட்டில் நிலவிய சமீபத்திய பேரழிவைத் தொடர்ந்து தேசிய மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை(Bandaranaike Memorial National Trust) 250 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில், நன்கொடைகான காசோலை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவிடம்(Harini Amarasooriya) பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த காசோலையை அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaike Kumaratunga) மற்றும் இயக்குநர்கள் குழு பிரதமரிடம் ஒப்படைத்தனர்.




