ஆசிய நாடுகளை உலுக்கிய பேரிடர் – 2000ஐ நெருங்கும் மரணங்கள்!
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐக் கடந்துள்ளது.
கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த சூறாவளியால் தெற்காசிய நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டது.
இதில் இந்தோனேசியாவில் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000 ஐ நெருங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆச்சே தமியாங்கும் (Aceh Tamiang) என்ற கிராமமும் ஒன்றாகும்.
இந்த கிராமத்தில் சுமார் 90% வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் இருப்பிடம் இன்றி தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




