வட சென்னை 2 : சூப்பர் அப்டேட் தந்த தனுஷ்
நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இட்லி கடை படத்தின் முன்வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ் வட சென்னை இரண்டாம் பாகம் குறித்து பேசியதாவது:
2026-இல் வட சென்னை 2 படப்பிடிப்பு தொடங்கும். அதற்கு அடுத்தாண்டு 2027-இல் படம் வெளியாகும் என்றார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்பரித்தார்கள்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் என மிகப்பெரிய பட்டாளமே நடித்து 2018-இல் வெளியாகி இன்றளவும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் படம் என்றால் அது வடசென்னை தான்.






