உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய வகை வைரஸ்
புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுளளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் 113 தனிப்பட்ட மாற்றங்களைக் கொண்ட புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜதார்த்தாவில் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதற்கமைய, அந்த நோயாளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்த போது அந்த வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில் சுமார் 37 வகை மாறுதல்கள் மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரதசத்தை அழிக்கும் சக்தியை கொண்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு பரவிய ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வெறும் 50 வகை தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது கண்டறியப்பட்ட வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது பரவினாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இந்த வகை வைரஸ் தொற்றுகள் எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறைந்த நோய் எதிர்ப்பு திறன் உடைய உடல் அமைப்புகளை கொண்ட நபர்களை அடிக்கடி பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.