பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : முதற்கட்ட சிகிக்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!
பிரித்தானியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்கை விட அதிகரித்துள்ள நிலையில், சிக்சைக்காக நீண்டநாள் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி நோயாளிகள் சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்த பிறகும், முதல் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
NHS இன் சமீபத்திய புள்ளிவிபரங்களின் அடிப்படையில், மக்கள் தொகையில் 9.5 வீதமானோர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பதாக கூறப்படுகிறது. இது நிர்ணயித்த இலக்கை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23.2 சதவீதாமானோர் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, நோயாளிகள் கதிரியக்க சிகிச்சைக்காக முன்னெப்போதையும் விட நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், வழக்கமான மருத்துவமனை சிகிச்சைகளைத் தொடங்கக் காத்திருப்பவர்களுக்கான காத்திருப்புப் பட்டியலும் உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.