ரஜினி – லோகேஷ் கூட்டணி – ஐதராபாத் பறந்தார் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் கூலி. இந்த படத்தின் சூட்டிங் நாளைய தினம் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள நிலையில் படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டர் அமைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நாளை ஐதராபாத்தில் துவங்கவுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.
நாளைய தினம் பூஜையுடன் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ப்ரோமோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரஜினியின் லுக் டெஸ்ட் ஓவர் என்றும் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து படத்திற்கான எதிர்பாப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது.
தன்னுடைய முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்த படத்தில் போதை கலாச்சாரங்கள் ஆகியவை இடம்பெறாது என்று லோகேஷ் கனகராஜ் உறுதிப்பட கூறியிருந்தார்.
தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அந்த படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்கை சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே லோகேஷ் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






