தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை!!!!! பல வீடுகள் மீது மண்மேடு சரிவு
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையுடன், ஹாலிஎல, ரொகடன்ன தோட்டத்தில் இன்று (11) பல வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சம்பவத்தை நிர்வகிப்பதற்காக ஹாலிஎல பிரதேச செயலகம், ஹலிலெல பொலிஸ் அனர்த்த நிவாரணப் பிரிவு மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் எவரையும் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை என ஹாலிஎல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த இடத்தில் மண்மேடுகளுக்கு அடியில் புதையுண்ட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





