Site icon Tamil News

ஜெர்மனியில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் – பாரிய மோசடி அம்பலம்

ஜெர்மனியில் இன்சொன்வேன்ஸ்கில்ட் என்று சொல்லப்படுகின்ற ஒரு நிறுவனமானது திவாலாகும் பொழுது அந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு நடைமுறை ஒன்று மேற்கொள்ளப்படும்.

அதாவது ஆபேற்றன் என்று சொல்லப்படுகின்ற நிறுவனமானது குறிப்பிட்ட காலத்துக்கு திவாலாகிய நிறுவனத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு சம்பளத்தை வழங்கும்.

இந்நிலையில் இன்சொன்வேன்ஸ்கில்ட் என்று சொல்லப்படுகின்ற திவாலாகும் பொழுது அந்த பணியாளர்கள் பெற்றுக்கொள்ள கூடிய பணத்தில் பல மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் ஜெர்மனியின் பொலிஸார் பல மாநிலங்களில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது ஒரு சட்டத்தரணியின் அனுசரனையின் மூலம் இவ்வாறு சில நிறுவனங்கள் திவாலாகி போனதாகவும் அதுவும் அவர்களாகவே திவாலாக்கிக் கொண்டு பணியாளர்களுக்கு குறித்த பணத்தை மோசடியான ரீதியில் பெற்றுக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version