மேற்குக் கரைக்குள் நுழைய கனடா பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அனுமதி மறுப்பு
பாலஸ்தீன(Palestine) அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை அடைய முயன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 கனேடியர்கள்(Canadian) குழுவிற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளதாக கனேடிய சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்டை நாடான ஜோர்டானில்(Jordan) இருந்து மேற்குக் கரையை அடைய முயன்றபோது இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பினர் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்(NCCM) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்: ஃபேர்ஸ் அல் சவுத்(Fares Al Soud), இக்ரா காலித்(Iqra Khalid), ஜென்னி குவான்(Jenny Kwan), சமீர் ஜுபேரி(Sameer Zuberi), அஸ்லம் ராணா(Aslam Rana) மற்றும் குர்பக்ஸ் சைனி(Gurbux Saini) ஆவர்.
கனேடிய-முஸ்லிம் வோட்(Canadian-Muslim Vote) என்ற இலாப நோக்கற்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக கனேடிய சமூகத் தலைவர்களுடன் பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை “பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளனர்.




