போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – தாக்குதல்தாரியை எதிர்கொண்ட நபருக்கு 2.5 மில்லியன் பரிசு!
போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது தாக்குதல் தாரி ஒருவரை தைரியமாக எதிர்கொண்ட கடை உரிமையாளருக்கு 2.5 மில்லியன் (£1.24 மில்லியன்) ஆஸ்திரேலிய டொலருக்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
நேற்று காலை மருத்துவமனையில் வைத்து அவரிடம் இந்த காசோலை கையளிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்குவதற்கு முன்பு, அகமது அல் அகமது என அழைக்கப்படும் நபர் காரின் பின்னால் மறைந்திருந்து தாக்குதல்தாரியை எதிர்கொண்டார்.
இதனை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியிருந்தன.
பெரும்பாலான ஆஸ்திரேலிய மக்கள் அவரை ஹீரோ என்று அழைத்திருந்தனர். மோதலின்போது அவரது கையில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





