பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – முதல் தலைவர் இவர் தான்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு 5 நாட்கள் கடந்த நிலையில் இன்னும் தலைவர் பதவி குறித்த அப்டேட்டுகள் வரவில்லை என எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு ஒரு செய்தி வந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் 9 சீசனின் முதல் தலைவராக, சோஷியல் மீடியா பிரபலம் மற்றும் போட்டியாளர்களில் ஒருவரான துஷார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
வழக்கமாக, பிக் பாஸ் வீட்டுல தலைவர்னா, சும்மா ஒரு ‘பேருக்கு’ இருப்பார். சண்டையைப் பஞ்சாயத்து பண்ணணும், வேலையைப் பிரிச்சு விடணும், அவ்வளவுதான். ஆனா, இந்த சீசன்ல தலைவர் பதவிக்குக் கொடுத்திருக்கும் ‘சகல சௌகர்யங்கள்’தான், மத்த போட்டியாளர்களைக் கொஞ்சம் பொறாமைப்பட வச்சிருக்கு.
துஷாருக்குன்னு வீட்டுக்குள்ளேயே சகல வசதிகளுடன் கூடிய ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கு. அவருக்குப் பல விஷயங்களில் சிறப்பான முன்னுரிமையும், தனி மரியாதையும் கொடுக்கப்பட்டிருக்கு.
துஷார் தான் அந்த அறைக்குள் முதல் ஆளாகச் சென்று, ‘ராஜ வாழ்க்கை’யை ஆரம்பிச்சுட்டார். இதை வெளியிலிருந்து பார்த்துட்டு இருந்த மத்த போட்டியாளர்கள், “அடப்பாவமே! தலைவர் பதவிக்கு இவ்வளவு சலுகைங்களா?”னு பொறாமையில் பார்த்தது செம ஹைலைட்.






