AI தொழில்நுட்பத்தை கல்வி துறையில் சேர்க்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம்!

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுப் பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட AI சாட்பாட்டை விரைவில் அணுக முடியும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கல்வித் துறையின் ‘NSWEduChat’ கருவி ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் 50 பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டதாகவும் சோதனை முடிவுகள் ChatGPT போன்ற தளங்களைப் போலல்லாமல் மாணவர்களுக்கு முழுமையான அல்லது நேரடி பதில்களை வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எதிர்காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிலும் ஓரளவிற்கு AI ஐப் பயன்படுத்தும்’ என்று கூறப்படுகின்ற நிலையில், கல்வித்துறையிலும் இதனை பயன்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.