நீண்ட காலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சினை – போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஆசிய நாடுகள்!

ஆப்கானிஸ்தானும் (Afghanistan) பாகிஸ்தானும் (Pakistan) போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
கத்தார் (Qatari) மற்றும் துருக்கியின் (Turkey) மத்தியஸ்தத்தில் நேற்று (18) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவ்விரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் (Qatari) வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் (Afghanistan), பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த விரிவான கலந்துரையாடலும் இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை நெருக்கடி இப்போது மோதல் சூழ்நிலையாக அதிகரித்துள்ளது, மேலும் கடந்த சில நாட்களாக இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட பலர் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன்படி, தற்போதைய நிலைமையைத் தீர்ப்பது குறித்த விவாதங்களில் உடனடி போர் நிறுத்தத்திற்கு இவ்விரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.