“2 வருடங்களுக்கு வர மாட்டேன்” அரவிந்த் சாமி எடுத்த திடீர் தீர்மானம்

90’s காலக்கட்டத்தில் சாக்கலேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் அரவிந்த் சாமி. பெயருக்கும் நபருக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பார்.
தமிழ் பெயரை வைத்துக்கொண்டு, பாலிவூட், ஹாலிவூட் நடிகரைப்போல் இருப்பது தான் ஹைலைட்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த இவர் இடையில் திடீரென காணாமல் போனார்.
பின் தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்தார். இவர் ஆரம்பித்து வைத்த நெகடிவ் ரோலைத்தான் தற்போது பல முன்னணி ஹீரோக்களும் கையில் எடுத்துள்ளனர்.
இதையடுத்து தற்போது மீண்டும் அரவிந்த் சாமி படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கான காரணத்தை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட போது வெளியிட்டுள்ளார்.
இதில், AI வணிகம் தொடர்பான பணியில் ஈடுபட்டு வருவதால் நடிப்பில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு விலகி இருப்பதாக கூறினார்.
மெய்யழகன் திரைப்படத்தை தமிழில் எடுத்ததுதான் தவறு என இயக்குநர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் மெய்யழகன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில் தான் திருப்தியடைந்ததாக தெரிவித்தார்.