சர்வதேச வேலை சந்தையை ஆட்டங்காண வைத்த AI – IMF தகவல்
சர்வதேச வேலை சந்தையை செயற்கை நுண்ணறிவு சுனாமியைப் போல் பாதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் 60 சதவீதத்தை வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளில் உலகெங்கும் உள்ள வேலைகளில் 40 சதவீத்தை செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும் என கிறிஸ்டலினா தெரிவித்தார்.
அந்த நிகழ்விற்கு மக்களை, வர்த்தகங்களைத் தயார்ப்படுத்தப் போதிய நேரம் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
சூழ்நிலையைச் சரியாகக் கையாண்டால் செயல்திறன் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் சமூகத்தில் இடைவெளியையும் அது அதிகரிக்கும்.
Zurich பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஜார்ஜீவா அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
(Visited 7 times, 1 visits today)