WhatsApp செயலிக்கு கூடுதல் பாதுகாப்பு – தவறாக அழுத்தினால் அழிந்து விடும்
WhatsApp செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக பயோமெட்ரிக் சென்சார் வசதியை நிறுவனம் கொண்டு வரவுள்ளது.
உலக அளவில் பல கோடி ஸ்மார்ட் போன் பயனாளிகளால் உபயோகப்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமானது WhatsApp செயலி. முதலில் வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக வந்து, புகைப்படம், வீடியோ, மற்ற ஃபைல்ஸ் என பகிர ஆரம்பித்து, ஆடியோ கால், வீடியோ என கால் என நீண்டு தற்போது பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டது.
பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டதால், WhatsApp பாதுகாப்பு வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வண்ணம் புதிய முயற்சியை WhatsApp நிறுவனம் கொண்டு வரவுள்ளது. அதில், ஏற்கனவே WhatsApp செயலியை திறக்கையில், அதில் நாம் பதிவு செய்த பாதுகாப்பு வசதி (செக்கியூரிட்டி பின்) இருக்கும்.
தற்போது கூடுதலாக ஒரு பாதுகாப்பு வசதியை அதில் கொண்டு வந்துள்ளது. அதில், பயோமெட்ரிக் சென்சார் எனப்படும் விரல் ரேகையை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை அந்த போன் வாட்ஸாப் பயனர் தவிர்த்து வேறு யாரேனும் சாட்டிங் பாக்ஸ் உள்நுழைய பார்த்தல் முதல் தடவை எச்சரிக்கும். அடுத்து முழு சாட்டிங் விவரத்தையும் அழிக்க கேட்கும். அத்தனையும் மீறி வேறு யாரேனும் நுழைந்தால் மொத்த சாட்டிங்கும் அழிந்துவிடும்படி வகைப்படுத்தபட்டுள்ளது.
இந்த வசதியை முதலில் பீட்டா வெர்சன் வாட்சாப் பயனர்களிடம் கொடுத்து ஆய்வு செய்து பின்னர் அனைவருக்கும் அளிக்கப்படும் எனவும் ,தேவை இருப்பின் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் வாட்சாப் தெரிவித்துள்ளது.