பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை
2017ம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பை விடுவிக்க கேரள(Kerala) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மலையாள நட்சத்திரத்தின் தொடர்பை நிரூபிக்க அரசு தரப்பு தவறவிட்டதாக கூறி எர்ணாகுளம்(Ernakulam) முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இந்நிலையில், தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய நடிகர் திலீப், “இது எனக்கு எதிரான சதி. எனக்கு உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 2017ல் ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நீடித்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத் துறைகளில் பணியாற்றிய நடிகை, பிப்ரவரி 17ம் திகதி இரவு ஒரு குழுவினரால் அவரது காரில் இரண்டு மணி நேரம் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





