யுனைடெட் ஏர்லைன்ஸ் சம்பந்தமான மேற்பார்வையை அதிகரிக்க நடவடிக்கை!
யுனைடெட் ஏர்லைன்ஸ் தொடர்பான மேற்பார்வையை அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடுமையாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் சமீபத்திய நாட்களில் விமான நிறுவனத்தின் தலைமையுடன் எடுக்கக்கூடிய தற்காலிக நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செயல்முறைகள், கையேடுகள் மற்றும் வசதிகளை மதிப்பாய்வு செய்வதற்காக வரும் வாரங்களில் யுனைடெட்டின் மேற்பார்வையை அதிகரிக்க ஏஜென்சி திட்டமிட்டுள்ளதாக செய்தி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)





