த்ரிஷாவை மிஞ்சிடும் காந்தாரா நடிகை ருக்மணியின் அழகு
திரைத்துறையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல்.
விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை ருக்மணி.
தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் ருக்மிணி வசந்தின் தோற்றம் தான் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை திரிஷா லுக்கையே மிஞ்சும் அளவிற்கு ருக்மிணியின் பிரம்மாண்ட தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.






