வட அமெரிக்கா

கனடாவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சிறிய விமானம் ; இருவர் படுகாயம்

வெள்ளிக்கிழமை மாலை மாண்ட்ரீலுக்கு தெற்கே இரண்டு வீடுகள் மீது சிறிய விமானம் ஒன்று மோதிய விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 7.30 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் Montérégie பகுதியில் உள்ள Saint-Rémi- ல் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக பறந்ததன் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் தெரிவிக்கையில், விமானம் ஒரு வீட்டில் விழுந்து நொறுங்கியது, பின்னர் சில மின்சார லைன்களைத் தாக்கியது, அதற்கு முன் இரண்டாவது வீட்டில் மோதியது என குறிப்பிட்டுள்ளனர்.

விமானத்தில் பயணித்த இருவருக்கும் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் எனவும் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பொலிர் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்