பிரான்ஸில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் வீடொன்றின் குளியறைக்குள் இருந்து இரண்டு மீற்றர் நீளமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மலைப்பாம்பை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தெற்கு பிரான்ஸின் Millau (Aveyron) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு வசிக்கும் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பெண் ஒருவர் தனியே வசித்து வரும் வீட்டின் குளியலறையில் இரண்டு மீற்றர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.
பின்னர் பாம்பு பிடிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. குறித்த மலைப்பாம்பு விஷமுடையதில்லை என்றபோதும், உணவுத் தேவைக்காக மனிதர்களை உண்ணக்கூடிய விலங்கு அது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)