ஜெனீவாவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் சூட்கேஸ் திடீர் என வெடித்து தீ-பதறிய பயணிகள்
சென்ற வியாழன் மலை ஸ்விஸ் ஜெனிவாவில் இருந்து நெதர்லாந்து, ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஈஸிஜெட் விமானம் புறப்பட்டது. நான் விமானத்தில் எரிய உடன் நான் தூங்கி விட்டேன். திடீரென தீ தீ என்று கத்தும் சத்தம் கேட்டது. நான் மிகவும் பயந்து விட்டேன். என்று ஒரு பயணி தெரிவித்தார்.
ஜெனிவாவில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்டு ஐந்து பத்து நிமிண்டலில் விமான நிலையதுக்கு திருப்பியது. ஒரு பயணி தெரிவித்த தகவலின் படி ஒரு பயணியின் சூட்கேசில் இருந்த எலக்ட்ரானிக் சிகரெட்டே காரம் என்று தெரிவித்தார். அந்த பயணியின் தலைக்கு மேல் வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே சூட்கேஸ் தீப்பிடித்துள்ளது.
விமானத்தின் முன் பகுதியில் தீ மற்றுமொரு சூட்கேஸ் மீது பரவியது. ஒரே புகைமண்டலமாக மாற பயணிகள் தமது கைகளில் இருந்த தண்ணீரை தீ மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனர் என்று இன்னும் ஒரு பயணி தெரிவித்தார்.
இவ்வாறு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் விமானி விமானம் ஜெனீவாவுக்கு திரும்பி செல்வதாக அறிவித்தார் என்று இன்னும் ஒரு பயணி தெரிவித்தார்.
விமான நிலையத்தில் தீயணைப்பு மற்றும் அவசர உதவி பிரிவினர் காத்து இருந்தார்கள். அவர்கள் விமானத்தில் இருந்து பயணிகளை விமானத்தில் இருந்து இறங்குவதற்கு உதவி செய்தார்கள். இவ்வாறு விபத்துக்கு உள்ளான விமானம் Flight EZS1517 ஆகும்.