பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு…

தனது அனுமதியின்றி தனது புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பல்வேறு வலைதளங்கள் அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக எனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
தனது ஏஐ புகைப்படங்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் வணீக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்க வேண்டும். எனவே, அனுமதியின்றி எனது புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தேஜாஸ் கரியா, “தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், ஐஸ்வர்யா ராயின் அனுமதியின்றி அவரது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பயன்படுவதற்கு தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.