நடுகடலில் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல்: 3 பிரித்தானிய பிரஜைகள் மாயம்!
எகிப்தின் – செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பற்றியுள்ளதுடன் அதில் பயணித்த 3 பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 12 பிரித்தானியர்கள் உட்பட 24 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக மார்சா அலம் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகு காலிப் துறைமுகத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்தது.
படகில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரித்தானியாவின் சுற்றுலாத் துறைக்கு இது பாரிய பின்னடைவாகும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 17 times, 1 visits today)





