கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீக்கரை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலா ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று தீக்கிரையாகி உள்ளது.
பஸ்ஸில் பயணம் செய்த ஆரம்ப பாடசாலை மாணவர்கள் எவருக்கும் ஆபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வாங்கூவார் பகுதியிலிருந்து பூங்கா ஒன்றிற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பஸ் திடீரென தீ பற்றி கொண்டுள்ளது.
பஸ்ஸின் சாரதி, ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கூட்டாக இணைந்து மிக வேகமாக பாடசாலை மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தரம் ஆறு மற்றும் ஏழு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா விற்காக இந்த பஸ்ஸில் பயணித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார தெரிவிக்கின்றனர்.
(Visited 12 times, 1 visits today)