அரசியல் கட்சிகளுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிளவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, தேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





