அமெரிக்கா – ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்
அமெரிக்கா – ஐரோப்பாசில பகுதிகளில் தகிக்கும் வெப்பம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா முதல் டெக்சஸ் வரை நிலவிவரும் கடும் வெப்பம் இந்த வாரயிறுதியில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோரு நாளும் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீனிக்ஸில் தொடர்ந்து 16ஆவது நாளாக வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கும் மேல் பதிவானது. இந்த நிலையில் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் வெப்பம் வாட்டுகிறது.
இத்தாலியில் இந்த வாரயிறுதியில் வரலாறு காணாத அளவில் வெப்பம் பதிவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ரோம் , புளோரன்ஸ், பொலோன்யா உள்ளிட்ட 16 நகரங்களில் ஆக உயரிய எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சிசிலி சார்டினியாஆகிய தீவுகளில் வெப்பம் 48 டிகிரி செல்ஸியஸை எட்டக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தாளமுடியாத வெப்பத்தால் கிரீஸின் அக்ரோபொலிஸ் சிற்பங்களைக் காணும் இடம் நண்பகல் முதல் மாலை 5 மணி வரை மூடப்பட்டது. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.