மனைவியுடன் வெளிநாட்டிற்கு பறந்தார் கோட்டாபய ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த விகாரைகளை வழிபடுவதற்காக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 10ம் திகதி அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் விசேட போதி பூஜைகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, கடந்த ஆண்டு ஜூலை 9ம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேறியதுடன் பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.
(Visited 11 times, 1 visits today)