பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அறிவித்த வெனிசுலா – பல கைதிகள் விடுதலையாக வாய்ப்பு!
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) நேற்று பொதுமன்னிப்பு சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளார்.
இதன் மூலம் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையை அமெரிக்கா ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி நீண்ட காலமாகக் கோரி வந்த நிலையில் தற்போது சாத்தியமாகியுள்ளது.
“இந்தச் சட்டம் அரசியல் மோதலால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த உதவும்” என்று டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கராகஸில் உள்ள ஹெலிகாய்டு (Helicoide) சிறைச்சாலையை மூடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது சித்திரவதை மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கு பெயர் பெற்ற சிறைச்சாலையாகும்.
குறித்த சிறைச்சாலை, காவல்துறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கான விளையாட்டு, சமூக மற்றும் கலாச்சார மையமாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
இருப்பினும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளது கைதிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





