இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு – இஸ்ரேலியரின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியா
இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இஸ்ரேலிய சமூக ஊடக பிரபலம் ஒருவரின் விசாவை ஆஸ்திரேலியா(Australia) ரத்து செய்துள்ளது.
இஸ்லாம் ஒரு அருவருப்பான சித்தாந்தம் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த சமி யாஹூத்(Sammy Yahood), இஸ்ரேலில் இருந்து புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு தனது விசா ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வெறுப்பு அடிப்படையில் மக்களின் விசாக்களை நிராகரிக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அதே சட்டத்தின் கீழ் யாஹூதின் விசா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமி யாஹூத் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சிட்னி(Sydney) மற்றும் மெல்போர்னில்(Melbourne) நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பேச திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14 அன்று போண்டி(Bondi) கடற்கரையில் 15 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஆஸ்திரேலியா தனது வெறுப்புக் குற்றச் சட்டங்களை இந்த மாதம் கடுமையாக்கியது குறிப்பிடத்தக்கது.





