பிரித்தானியாவில் மீண்டும் தீவிரமடையும் வெப்ப அலையின் தாக்கம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் வெப்பநிலை 30C (86F) ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன், மிட்லாண்ட்ஸ், கிழக்கு மற்றும் தெற்கு இங்கிலாந்தில் ஜூன் 9 வெள்ளிக்கிழமை 09:00 BST முதல் ஜூன் 12 திங்கள் அன்று 09:00 BST வரை இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
(Visited 9 times, 1 visits today)