பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்திய கும்பல் பேச்சுவார்த்தை நடத்த காலக்கெடு விதித்துள்ளது!
பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் கும்பல் தங்களால் ஹேக் செய்யப்பட்ட தகவல்களை ஆன்லைனில் வெளியிட காலக்கெடுவை விதித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஏ மற்றும் பூட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல்களை ரஷ்யக் குழுவானது ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.
குறித்த குழுவானது க்ளோப், MOVEit என்ற மென்பொருள் ஹேக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டார்க் வெப்பில் அறிவிப்பை வெளியிட்டது.
வங்கி மற்றும் தொடர்பு விவரங்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் தனிப்பட்ட தரவு தாக்குதலில் அணுகப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த தாக்குதலில் விமான நிறுவனமான ஏர் லிங்கஸ் போலவே பிபிசியும் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதிக்குள் மின்னஞ்சள் செய்து குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு காலக்கெடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.