பிரித்தானியாவில் புதிய வரலாறு: இயற்கை பிரசவத்தை முந்தியது அறுவைச் சிகிச்சை !
பிரித்தானியாவின் மருத்துவ வரலாற்றிலேயே முதல்முறையாக, இயற்கை பிரசவங்களை (Natural Vaginal Births) விட அறுவைச்சிகிச்சை (C-section) முறை மூலமான பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை (NHS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியான NHS தரவுகளின்படி (2024-2025) மார்கழி (December) வரையில்
மருத்துவமனைகளில் நடைபெறும் ஒட்டுமொத்த பிரசவங்களில் 45% அறுவைச்சிகிச்சை (C-section) முறையில் நடைபெற்றுள்ளன.

இயற்கை முறையில் நிகழும் பிரசவங்கள் 44% ஆகக் குறைந்துள்ளன.
இந்த ஆண்டு 20% பிரசவங்கள் முன்னரே திட்டமிடப்பட்ட அறுவைச்சிகிச்சைகளும் (Elective C-section) மிகுதி 25.1% பிரசவங்கள் எதிர்பாராத சிக்கல்களால் அவசரகால அடிப்படையில் செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகளும் (C-section) ஆகும்.
மருத்துவ நிபுணர்கள் இந்த அதிகரிப்பிற்கு இரண்டு முக்கிய காரணங்களை குறிப்பிடுகிறார்கள் அவை வயது மற்றும் உடல் பருமன்.

பெண்கள் அதிக வயதில் (30 வயதுக்கு மேல்) குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை அதிகரித்துள்ளது. 40 வயதைக் கடந்த பெண்களில் சுமார் 59% பேருக்கு அறுவைச்சிகிச்சை மூலமே பிரசவம் நடைபெறுகிறது.
மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதம், பிரசவத்தின் போது கூடுதல் சிக்கல்களை உருவாக்குவதால் அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாததாகிறது.
அடுத்து உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும்.

மேலும் வலி குறித்த அச்சம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பெண்களே திட்டமிடப்பட்ட அறுவைச்சிகிச்சைகளும் (Elective C-section) முறையைத் தேர்ந்தெடுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் (RCOG) தலைவர்கள், “அறுவைச்சிகிச்சை விகிதம் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயம் அல்ல, ஆனால் இது மகப்பேறு பிரிவுகளில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் வசதிகளின் தேவையைக் கூட்டுகிறது





