ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) ஏற்கனவே இறந்திருக்கலாம் – கவலையில் மகன்!
ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) மகன் கிம் அரிஸ் (Kim Aris), இரண்டு வருட தகவல் முடக்கம் மற்றும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது 80 வயது தாயார் “ஏற்கனவே இறந்திருக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
நோபல் அமைதிப் பரிசு பெற்ற திருமதி சூ கி, 2021 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
அவரோ அல்லது அவரது சட்டக் குழுவோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவரது உடல்நிலை குறித்து இரண்டாம் நிலை தகவல்களை மட்டுமே பெறுவதாகவும் சூகியின் மகனான கிம் அரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆகவே அவர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தின் நடவடிக்கைகளில் தனது தாயார் “உடந்தையாக இல்லை” என்றும் அரிஸ் வலியுறுத்துகிறார்.





