இந்தோனேசியாவில் பாரிய தீவிபத்து – நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசம்!
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் (Jakarta) நேற்று ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசமாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கயிறுகளை விற்கும் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கடைகளுக்கும் பரவியதாக குறிப்பிடப்படுகிறது.
பத்தொன்பது தீயணைப்பு இயந்திரங்களும் 80 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரம் போராடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தீவிபத்தினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மின் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஜகார்த்தா பேரிடர் மேலாண்மை அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





