ஒடிசாவில் மற்றுமொரு புகையிரதம் விபத்து!
சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு புகையிரதமொன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.
ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை வந்து பயணித்த கோரமண்டல் கடுகதி புகையிரதம், ஒடிசா மாநிலத்தின் பாலசோா், பஹாநகா் புகையிரதம் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு புகையிரதம் மீது, கோரமண்டல் கடுகதி புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, அதன் பெட்டிகள், சரக்கு புகையிரதம் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி கிடந்தன.
அதன்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா கடுகதி புகையிரதம் கோரமண்டல் புகையிரதம் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர சம்பவத்தில் 280 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது.