வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இன்று காலை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, வெல்லம்பிட்டியவில் வசிக்கும் 48 வயதுடைய ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து FlyDubai FZ 569 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த நபர் 28,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 140 அட்டைப் பெட்டிகளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 10, 2025 அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.





