டிஜிட்டல் பாடசாலை ( Digital School) கல்வியை ஊக்குவிக்கும் பிரபல நாடு!
தென் அமெரிக்க நாட்டின் அமேசன் பகுதி மற்றும் கரீபியனை சுற்றியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்த கயானா அரசாங்கம் ஒன்லைன் பாடசாலையை ஆரம்பித்துள்ளது.
குறித்த டிஜிட்டல் பாடசாலையில் (Guyana Digital School) ஏறக்குறைய 30000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இது உயர்நிலைப் பாடசாலை படிப்புகளை வழங்குகிறது, அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளது.
“இந்த திட்டமானது நாட்டிலும் உள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உண்மையான தரமான கல்வியை வழங்கும் அதேநேரம் அனைத்து பாடப் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
எங்கள் கரீபியன் அண்டை நாடுகளுக்கும் நாங்கள் இலவச அணுகலை வழங்குகிறோம்” என கயானாவின் துணை தலைமை கல்வி அதிகாரி ரித்தேஷ் துலராம் (Ritesh Tularam) தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எண்ணெய் வளம் மிக்க நாடு 1990களின் நடுப்பகுதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த இலவச பல்கலைக்கழகக் கல்வியை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருத்த நிலையில் தற்போது இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.





