30 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!
அமெரிக்கா தனது சர்ச்சைக்குரிய பயணத்தடையை விரிவுப்படுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அறிவிப்பிற்கு அமைய ஏறக்குறைய 30இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள நாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம் பாதுகாப்பு காரணங்களை காட்டி 12 நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்வோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக 30இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கம் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கையில் கொண்டுள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது.





