உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல் – விசாக்கள் நிராகரிப்பு

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்களை இரத்து செய்ய்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 16,000 விசாக்களும், வன்முறையில் ஈடுபட்டமைக்காக 12,000 விசாக்களும், திருட்டு சம்பந்தமான குற்றச்சாட்டில் 8,000 விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் நிராகரிக்கப்பட்ட மொத்த விசாக்களில், இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட விசாக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விசா முடிவடைந்தும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தமை, பல்கலைக்கழகங்களில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட சுமார் 6,000-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை காரணங்களுக்காகவும் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டது குறித்து சமூக ஊடகக் கருத்து தெரிவித்ததற்காக, குறைந்தது ஆறு பேரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதேவேளை, அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயற்பட்ட தரப்பினரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
error: Content is protected !!