ஐரோப்பா செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

உக்ரைன் முழுவதும் ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு ஒடேசா(Odesa) பகுதியில் ரஷ்ய ஜெட் விமானங்கள் பல வாகனங்களை குண்டுவீசித் தாக்கியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கெர்சன் ஒப்லாஸ்டில்(Kherson oblast), ரஷ்யப் படைகள் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ட்ரோன், பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் ஒலெக்சாண்டர் புரோகுடின்(Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை, மைக்கோலைவின்(Mykolaiv) புறநகர்ப் பகுதியை தாக்கியதில் 20 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், சபோரிஜியா(Zaporizhzhia ) பகுதியில், 18 குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்ய தாக்குதல்கள் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் இவான் ஃபெடோரோவ்(Ivan Fedorov) குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!