உலகம்

அமெரிக்கா-மலேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோலாலம்பூர் வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வர்த்தக ஒப்பந்தத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன்(Anwar Ibragi) அவர் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் அன்வார் இப்ராகிமின் நிர்வாகம் மேற்கொண்ட பல சலுகைககள் உள்ளடங்கியிருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நவீன தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியை(Supply chain) மையமாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மலேசியாவுடனான ஒப்பந்தம் இருதரப்பிலும் முக்கியமான கனிமங்களில் வர்த்தக முதலீட்டை உறுதி செய்கிறது என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர்(Jamieson Greer) கூறியுள்ளார்.

“நமது தொழில்துறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் நமது பொருளியலுக்கும் மிக முக்கியமான கனிமங்களைக் கொண்டுள்ள உலகில் வாழ்ந்து வருகிறோம். அந்த வகையில் நம்மிடையே இதற்கான ஒத்துழைப்பும் அவசியமாகிறது. இது, ஒருவருக்கு ஒருவர் சுமூகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்ய உதவுகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்