வங்கதேசத்தின் விமான நிலையத்தில் தீவிபத்து!

பங்களாதேஷின் டாக்காவில் (Dhaka) உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் (Hazrat Shahjalal International Airport ) சரக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்வரும் பல விமானங்கள் சட்டோகிராமில் (Chattogram) உள்ள ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்திற்கும் ( Shah Amanat International Airport), சில்ஹெட்டில் (Sylhet) உள்ள உஸ்மானி சர்வதேச விமான நிலையத்திற்கும் (Osmani International Airport) திருப்பி விடப்பட்டன.
பங்களாதேஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், பங்களாதேஷ் தீயணைப்பு சேவை, பங்களாதேஷ் கடற்படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படை உட்பட பல நிறுவனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உதவி வருவதாக இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது.
தீவிபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.