உலகம்

வங்கதேசத்தின் டாக்காவில்(Dhaka) அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று(17) ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) அரசாங்கத்திற்கு எதிராக திடீரென இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறையினரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. மேலும், இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதனால் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்