மூன்று மாதத்தில் முறிந்த உறவு! திரிஷாவுக்கு மீண்டும் திருமணம்?

அனைத்து மொழிகளிலும் ரவுன்டு கட்டி சுமார் 22 ஆண்டுகளை கடந்தும் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக புதிதாக வரன் பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அந்த வரன், சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் என கூறப்படுகிறது.
இரு குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் இதுவரை இந்த செய்தி குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
மூன்று மாதத்தில் முறிந்த உறவு!
2015 ஜனவரி 23ம் திகதி சென்னையில் பிரபல தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஏப்ரல் மாதமே அவர்களின் நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்து, திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்கு பிறகும் த்ரிஷா கையில் ஒரு டஜன் படங்கள் இருந்தன. அவர் அதில் நடிக்க முயன்றார். ஆனால் வருண் குடும்பத்தார் அதற்கு சம்மதிக்கவில்லை. இது தான் பிரச்னையின் அடி.
அதன் பின் ஏற்பட்ட மனகசப்பில் வருணின் தங்கை திருமணத்தை கூட புறக்கணித்த த்ரிஷா, அதன் பின் அவர் அணிவித்த மோதிரத்தை கழற்றிவிட்டு, திருமணம் ரத்து ஆனதை அறிவித்தார்.
பின்னர் பிரபல நடிகர் ரானாவுடன் காதலில் இருப்பதாகவும் கிசு கிசுக்கள் வந்தன. தற்போது தொழிலதிபருடன் திருமணம் என்ற செய்தியும் வந்துள்ளது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.