இந்த வார எவிக்ஷனில் வெளியேறப்போவது இவரா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் முதல் வாரமே எவிக்ஷனுக்கு பல பெயர்கள் நாமினேசன்கள் செய்யப்பட்டது.
இதில் முதல் வாரம் என்பதால் எவிக்ஷனுகு வாய்ப்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் சக போட்டியாளர்களால் அதிக நாமினேட் செய்யப்பட்டவர் என்றால் அது, கலையரசன் தான்.
அவருக்கு மட்டும் மொத்தம் 12 போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர். அதற்கு அடுத்த இடத்தில் 7 வாக்குகளுடன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்தார்.
இப்படி இருக்கையில் இந்த வாரத்தில் குறைந்த வாக்குகள் யார் பெற்றுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பலரும் முதல் வாரத்திலேயே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் இணையவாசிகள் அதிகம் ட்ரோல் செய்யும் கண்டெண்ட்டுகளை வாட்டர் மெலன் திவாகர் கொடுத்து வருவதால், அவர் தொடர்ந்து ஆட்டத்தில் நீடித்தால் ரசிகர்கள் அவரை தொடர்ந்து ட்ரோல் செய்யலாம் என்றும் கூறப்படுகின்றது.
இவகளுக்கு அடுத்த இடத்தில், ஆதிரையும் அதற்கும் அடுத்த இடத்தில் வியானாவும் உள்ளார்கள். நான்காவது இடத்தில் பிரவின் ராஜ் உள்ளார்.
இவருக்கு அடுத்து அப்சரா உள்ளார். இப்படி இருக்கும்போது, பிக்பாஸ் விமர்சகர்களை நாய்கள் என்று விமர்சித்தவரும் சக போட்டியாளர்களால் அதிகம் நாமினேட் செய்யப்பட்டவருமானா, கலையரசன் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளார்.






